“அல வைகுண்டபுரம்” படத்தின் மூலம் அனைவரையும் கட்டி போட்டவர் நடிகை பூஜா ஹெக்டே. இதன் காரணமாக இவர் காட்டில் மழை என்பது போல தொடர்ச்சியாக பெரிய நடிகர்களின் படங்களில் இவரை பெரிய தொகைக்கு ஒப்பந்தம் செய்தனர்.
ஆனால், இவர் நடித்த அனைத்து படங்களுமே பெரும் தோல்வியை சந்தித்து வருவதால் தற்போது தயாரிப்பாளர்கள் இவரை மீண்டும் பெரிய படங்களுக்கு ஒப்பந்தம் செய்ய தயக்கம் காட்டுகின்றனர்.
ராதே ஷ்யாம், பீஸ்ட், ஆச்சார்யா,லைகர் ஆகிய படங்கள் மண்ணை கவ்வியதால் தற்போது படம் கிடைத்தால் போதும் என்கிற நிலைக்கு பூஜா ஹெக்டே தள்ளப்பட்டுள்ளர்.