Mnadu News

வேலூர் தொகுதியின் மஞ்சள் நிற செண்டிமெண்ட்… கலக்கத்தில் திமுக

வேலூர் தொகுதியில் திமுக வேட்பாளராக துரைமுருகனின் மகன் கதிர் ஆனந்த் மற்றும் அதிமுக கூட்டணி சார்பில் புதிய நீதிக் கட்சியின் தலைவர் ஏசி சண்முகம் ஆகியோர் வேலூர் தொகுதியில் போட்டியிடுகிறார்.

வன்னிய சமூகம் அதிகமாக வசிக்கும் தொகுதியான வேலூர் தொகுதியில் சமூகத்தின் அடையாளமாக கருதப்படும் மஞ்சள் நிறத்துண்டு அணிவது அரசியல் வட்டாரத்தில் இயல்பான விசயமாக கருதப்படுகிறது.

இதனால் தான் என்னவோ தொடர்ந்து மஞ்சள் நிறச்சட்டையை கதிர் ஆனந்த் அணிந்து வந்திருக்கிறார். ஆனால் தேர்தலில் போட்டியிட அறிவிப்பு வெளியானதிலிருந்து வெள்ளைச் சட்டைக்கு மாறியிருக்கிறார்.

அதே சமயத்தில் அதிமுக கூட்டணி வேட்பாளர் ஏசி சண்முகம் மஞ்சள் துண்டை பயன்படுத்த ஆரம்பித்துள்ளார். திமுக சாதியக் கட்சி என்ற அடையாளம் வந்துவிடக்கூடாது என்ற நோக்கில் கதிர் ஆனந்த் இந்த முடிவுக்கு வந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது.

மேலும் மாற்றுச் சமூகமான ஏசி சண்முகம் வன்னியச் சமூக வாக்குகளை சேகரிக்க மஞ்சள் நிறத் துண்டை பயன்படுத்த ஆரம்பித்துள்ளார். வன்னிய சமூகத்திற்கான இட ஒதுக்கீட்டைப் பெற்றுத் தந்த கலைஞருக்கு நன்றிக் கடனாக ராமதாஸால் அளிக்கப்பட்ட மஞ்சள் துண்டுதான் கடைசி வரை கலைஞரின் தோளை அலங்கரித்தது என்பது குறிப்பிடத்தக்கது.

மஞ்சள் நிற செண்டிமெண்ட்டை கையில் எடுத்துள்ள ஏசி சண்முகம் ஜெயிப்பாரா? மஞ்சள் சென்டிமெண்டை தற்காலிகமாக கைவிட்ட கதிர் ஆனந்த ஜெயிப்பாரா என்று மக்கள் மன்றத்தில் பார்ப்போம்.

Share this post with your friends