காங்கிரஸ் எம்.பி., ராகுல் கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை ‛பாரத் ஜோடோ யாத்திரை’ என்ற பெயரில் நடைப்பயணம் மேற்கொண்டு வருகிறார். தற்போது கர்நாடக மாநிலத்தில் நடைப்பயணத்தை தொடர்ந்து வருகிறார். இன்று காலை 6.30 மணிக்கு கர்நாடகாவில் சித்ரதுர்கா மாவட்டம் சால்கெரே பகுதியில் நடைப்பயணத்தை தொடர்ந்துள்ள ராகுல் காந்தி வெளியிட்டுள்ள அறிக்கையில், ‛கர்நாடகாவில் பா.ஜ.க, அரசு வேலை வாய்ப்புகளை ஏலத்திற்கு விடுகிறது. போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பதவி 80 லட்சம் ருபாய்க்கு விற்றுள்ளது. உதவி பேராசிரியர் பதவி ‘விற்பனைக்கு’, இன்ஜினியர் பதவி விற்பனைக்கு . இளைஞர்களோ வேலையில்லா திண்டாட்டத்தின் பிடியில் உள்ளனர் என்று விமர்சித்துள்ளார்.
டெல்லி வந்த மாலத்தீவு அதிபருக்கு ராணுவ அணிவகுப்பு மரியாதை
டெல்லியில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் வருகை புரிந்த அதிபர் முய்சுவை ராணுவ அணிவகுப்பு...
Read More