கோமாளி, எல் கே ஜி, மூக்குத்தி அம்மன், வெந்து தணிந்தது காடு என தொடர் பிளாக் பஸ்டர் படங்களை கொடுத்த ராசியான நிறுவனம் வேல்ஸ் ஃபில்ம் இன்டர்நேஷனல். இதன் நிறுவனரான இஷாரி கணேஷ் தரமான கதைகளை தேர்வு செய்து தயாரித்து வருகிறார்.
அதன்படி, தற்போது அவர் தயாரிப்பில் உருவாகி வரும் படம் “சிங்கப்பூர் சலூன்”. ரௌத்திரம், இதற்கு தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, காஷ்மோரா, ஜுங்கா, அன்பிற்கினியாள் ஆகிய படங்களின் மூலம் தனித்துவ இயக்குனராக பெயர் பெற்றவர் கோகுல். ஆர் ஜே பாலாஜி லீட் ரோலில் நடித்து வருகிறார்.இப்படம் அடுத்த வருடம் மார்ச் மாதம் வெளியாகிறது.
இந்த நிலையில் வேல்ஸ் நிறுவனத்தின் புதிய பட அறிவிப்பை நேற்று வெளியிட்டது. ஹிப் ஹாப் ஆதி ஹீரோவாக நடித்து, இசையமைக்கும் படம் அது. நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஒடு ராஜா படத்தின் இயக்குனர் கார்த்திக் வேணுகோபாலன் இப்படத்தை இயக்குகிறார். இது பிரம்மாண்ட தயாரிப்பாக உருவாக உள்ளது குறிப்பிடத்தக்கது. இப்படம் அடுத்த வருடம் மே மாதம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
லிங்க் : https://youtu.be/_eYdi30HXxQ