வைகை புயல் வடிவேலுவுக்கு எண்டே இல்லை என்று சொன்னால் அது மிகையாகாது. எல்லா சூழலிலும் எல்லா காலத்திலும் அவர் காமெடி பொருந்தி நிற்கும். திரைத்துறையில் விதிக்கப்பட்ட தடை காரணமாக வடிவேலு பல வருடங்கள் நடிக்காமல் இருந்து வந்தார். ஆனால் தற்போது தலைவன் இஸ் பேக் என சொல்லும் அளவுக்கு தொடர்ந்து நடித்து வருகிறார்.

தற்போது சுராஜ் இயக்கத்தில் நாய் சேகர் ரிடர்ன்ஸ் மற்றும் மாரி செல்வராஜின் மாமன்னன் , பி வாசு இயக்கத்தில் சந்திரமுகி 2 ஆகிய படங்களில் முன்னணி ரோலில் நடித்து வருகிறார். இப்போதெல்லாம் வெறும் காமெடி ரோல்களில் நடிப்பது என்று இல்லாமல் குணச்சித்திர ரோல்களை தேர்வு செய்து நடிக்கிறார்.

அந்த வகையில் விஜய் சேதுபதியின் புதிய படத்தில் இவரை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அதே போல ஒரு முழு நீள காமெடி படமொன்றில் கெளதம் மேனன் இயக்கத்தில் நடிக்க உள்ளதும் வெளியாகி உள்ளது.
