வம்சி இயக்கத்தில் தமன் இசையில் பிரம்மாண்ட தயாரிப்பாளர் தில் ராஜு தளபதி விஜய், ரஸ்மிகா மந்தனா நடிப்பில் உருவாகி வரும் படம் தான் “வாரிசு”. பொங்கல் பண்டிகைக்கு உலகமெங்கும் திரைக்கு வருகிறது.
இந்த படத்தின் முடிந்து விட்ட நிலையில் தற்போது விஜய் துபாய் சென்று ஓய்வெடுத்து வருகிறார். அவர் வந்த பிறகு தளபதி 67 படத்தின் அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு படக்குழு வாரிசு படத்தின் முதல் சிங்கிள் ஐ வெளியாட உள்ளதாக தகவல் பரவிய நிலையில், வாரிசு படத்தின் அடுத்த போஸ்டர் ஐ வெளியிட்டு படக்குழு வேறு ஒரு சர்ப்ரைஸ் ஐ கொடுத்துள்ளது. ஆனாலும், விரைவில் முதல் சிங்கிள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.