Mnadu News

வைரலாகும் விஜய்யின் நியூ லுக்!

தளபதி 67 படத்துக்கு நாளுக்கு நாள் எதிர்பார்ப்பு கூடி கொண்டே வருகிறது. தற்போது, வம்சி இயக்கத்தில் வாரிசு படத்தில் விஜய் நடித்து வரும் நிலையில், இப்படம் அடுத்த வருட பொங்கலுக்கு ரிலீஸ் ஆக உள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், விஜய் 67 படத்தை லோகேஷ் இயக்க போவதாக வந்த தகவல் பெரும்பாலும் உறுதி ஆகியுள்ள நிலையில், அவர் ஸ்கிரிப்ட் தயார் செய்யும் பணியில் தீவிரம் காட்டி வருகிறார்.

அண்மையில் இப்படத்தில் நடன கலைஞர் வசந்தி இணைந்துள்ள நிலையில், தற்போது இணையத்தில் கசிந்துள்ள விஜய்யின் புதிய தோற்றம் பலத்த வரவேற்பை பெற்றுள்ளது. விரைவில் தளபதி 67 பற்றிய அறிவிப்பு தயாரிப்பு தரப்பில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Share this post with your friends