Mnadu News

ஸ்கிரீன் ஷாட் மூலம் உண்மையை வெளிப்படுத்திய ரைசா

மாடலிங் துறையில் யாருக்கும் தெரியாத முகமாக இருந்த ரைசா 2017 ஆம் ஆண்டு வெளியான பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் தமிழக மக்களையும் தமிழ் ரசிகர்களையும் கவர்ந்து பிரபலமடைந்தார் .

ரைசா இந்நிகழ்ச்சிக்கு பின் தமிழ் திரைப்படங்களில் சிறு சிறு வேடங்களில் நடித்து வந்த ரைசா தற்போது கதாநாயகியாகவும் சில படங்களில் நடித்துவருகிரார். அதற்கடுத்து வெளிவந்த பியார் பிரேமா காதல் என்னும் திரைப்படும் மூலம் கதாநாயகியாக தனது திரை பயணத்தை தொடங்கிய ரைசா காதலிக்க நேரமில்லை.

ஆலிஸ் போன்ற திரைப்படங்களிலும் நடித்து வருகிறார். இந்நிலையில் ரைசா தனது இன்ஸ்டாகிராம் பதிவில் புகைப்படம் ஒன்றை வெளியிட்டார். அதில் விக்கிப்பீடியாவில் அவரை பற்றி வந்த செய்திகள் அனைத்தும் பொய் என்று ஸ்கிரீன் ஷாட்மூலம் தெளிவாக குறிப்பிட்டுள்ளார். மேலும் விக்கிபீடீயாவில் யார் வேண்டுமானாலும் எதை வேண்டுமானாலும் பதிவிடலாம் என்ற செய்தியையும் அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்

Share this post with your friends