Mnadu News

ஸ்ரீபெரும்புதூரில் உலக மன நல நாள் விழிப்புணர்வு நிகழ்ச்சி

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் உள்ள இளைஞர் நலன் மேம்பாட்டு நிறுவனத்தில் உலக மன நல நாள் கொண்டாடப்பட்டது. அதனையொட்டி ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களிடையே மனநலம் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நடைபெற்ற சிறப்பு கருத்தரங்கில் மனநல நிபுணர் ஷாலினி சிறப்பு விருந்தினராக பங்கு கொண்டு உடல் நலமும் மனநலமும் ஒன்றோடு ஒன்று பின்னிப் பிணைந்தது குறித்த ஆலோசனைகளை வழங்கினார்.

அதனைத் தொடர்ந்து நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின்போது பேராசிரியர் லலிதா கூறுகையில்,


திருப்பெரும்புதூர் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமப்புற ஏழை எளிய இளைஞர்களை கண்டறிந்து அவர்கள் முன்னேற்றத்திற்கு தேவையான அனைத்து பயிற்சிகளையும் வழங்குவதாகவும் இளைஞர்களின் முன்னேற்றத்திற்கு வழி வகுக்கும் வகையில் உலகத் தரம் வாய்ந்த பத்து புதிய பாடப்பிரிவுகளை துவக்கி உள்ளதாகவும் தெரிவித்தார். கிராமப்புற இளைஞர்களின் மேம்பாட்டிற்கு முக்கியத்துவம் அளிக்கும் நிறுவனமாக ராஜீவ் காந்தி இளைஞர் நலன் மேம்பாட்டு நிறுவனம் பயிற்சிகளை வழங்குவதாக அந்நிறுவனம் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

Share this post with your friends