Mnadu News

ஹமாஸை ஒழிக்கும் வரை போர் தொடரும்; இஸ்ரேல் அதிபர் எச்சரிக்கை!

காசாவில் இஸ்ரேலுக்கும் ஹமாசுக்கும் இடையே தொடர்ந்து 66வது நாளாகப் போர் நடைபெற்று வரும் நிலையில், ஹமாஸ் மீது தாக்குதல் நடத்த இஸ்ரேலியப் படைகள் விடாப்பிடியாக இருந்து வருகிறது.இந்த போரில் காசாவில் மட்டும் பலியானவர்களின் எண்ணிக்கை 18 ஆயிரத்தை நெருங்கியுள்ளது.

இந்நிலையில், பயங்கரவாத குழு ‘இப்போதே சரணடைய வேண்டும்’ என்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அழைப்பு விடுத்துள்ளார். போர் தொடங்கியது முதலே இஸ்ரேலுக்கு ஆதரவாக இருந்து வரும் அமெரிக்கா அந்த நாட்டுக்கு தொடர்ந்து ராணுவ உதவிகளை வழங்கி வருகிறது.

அந்த வகையில் புதிய தொகுப்பாக (சுமார் ரூ.834 கோடி) மதிப்புடைய ராணுவ தளவாடங்களை இஸ்ரேலுக்கு அமெரிக்க வழங்கியுள்ளது. அதன்படி அமெரிக்காவின் ஆயுத உதவியுடன் போரில் தாங்கள் தொடர்ந்து முன்னேறி வருவதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது.

Share this post with your friends