நடிகைகள் பலர் தங்களுக்கு பாலியல் தொந்தரவுகள் கொடுக்கின்றனர் என குற்றச்சாற்றினை முன் வைக்கின்றனர் . உதாரணமாக ஆந்திர திரையுலகில் நடிகையான ஸ்ரீரெட்டி பாலியல் தொந்தரவு கொடுத்தாக போராட்டத்தில் ஈடுபட்டார் .
அதே போல தமிழில் விஷாலுடன் நடித்த தீராத விளையாட்டு பிள்ளையின் கதாநாயகியாக அறிமுகமான தனுஸ்ரீ தத்தாவும் குற்றச்சாட்டை முன்வைத்தார். இவர் பிரபல இந்தி நடிகரான நானா படேகர் மீது பாலியல் புகார் கூறி பாலிவுட் பட உலகையே அதிர வைத்தார்.
தனுஸ்ரீ தத்தா கூறிய புகாருக்கு பின்னர் தான் பெண்கள் தங்களுக்கு ஏற்படும் பாலியல் தொந்தரவுகளுக்கு தீர்வு காணும் நோக்கில் அமைக்கப்பட்ட மீ டூ இயக்கம் இந்தியாவில் பிரபலமானது.
இந்த நிலையில் அமெரிக்காவின் பாஸ்டன் நகரில் உள்ள ஹார்வர்டு பிசினஸ் பள்ளியில் உரை நிகழ்த்த தனுஸ்ரீ தத்தாவிற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்த பள்ளியில் வருகின்ற 16ம் தேதி நடை பெற இருக்கின்ற இந்திய மாநாடு நிகழ்ச்சியில் பேச அவரை அழைத்துள்ளனர். இதுபோல் இயக்குநர் ராஜமவுலி உள்ளிட்ட மேலும் சிலரும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.