ஹிஜாப் தடைக்கு எதிரான மேல் முறையீட்டு வழக்கில் வாதங்கள் முடிந்த நிலையில் தீர்ப்பை சுப்ரீம் கோர்ட் ஒத்திவைத்துள்ளது.
பெங்களூரு கர்நாடகத்தில் கல்வி நிறுவனங்களில் வகுப்பறைக்குள் மாணவிகள் ஹிஜாப் அணிந்து வர கர்நாடக அரசு தடை விதித்து உள்ளது. இதனை எதிர்த்து கர்நாடக ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவை விசாரித்த கர்நாடக ஐகோர்ட், ஹிஜாப் அணிவது இஸ்லாமில் கட்டாயம் இல்லை என்றும் கர்நாடக அரசு பிறப்பித்த உத்தரவு செல்லும் என்றும் தீர்ப்பளித்தது. இதனை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. அந்த மனுக்கள் மீதான விசாரணை நீதிபதிகள் ஹேமந்த் குப்தா, சுகன்சு துலியா ஆகியோர் அடங்கிய அமர்வு முன் ஒருவாரத்திற்கும் மேலாக நடைபெற்றது. அப்போது கர்நாடக அரசு மற்றும் இஸ்லாமிய மாணவிகள் தரப்பு வழக்கறிஞர்கள் பரபரப்பு வாதங்களை முன்வைத்தனர். இந்த வழக்கில் வாதங்கள் நிறைவு அடைந்த நிலையில், இன்று இந்த வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது.