விக்ரம் வெற்றி:
பல வருடங்களுக்கு பிறகு ஒரு தரமான மற்றும் அபார வெற்றி என சொல்லும் அளவுக்கு அமைந்தது “விக்ரம்” படத்தின் வெற்றிக் கதை. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான இந்த படத்தில் பெரும் நட்சத்திர படையே நடித்து இருந்தது. இதன் மூலம் கமலை மீண்டும் கமர்ஷியல் நாயகனாக தமிழ் சினிமா வரவேற்றது. அவரின் மார்கெட் அந்தஸ்த்தை உயர்த்தியது இப்படம்.
இந்தியன் 2 :
இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் “இந்தியன் 2” படத்தின் பணிகள் விரைவில் முடிவடைய உள்ளது என தெரிய வந்துள்ளது. மேலும், இதில் எஸ் ஜே சூரியா வில்லனாக நடிப்பதால் படத்தின் மீதான ஆர்வம் எகிறி உள்ளது என்றே சொல்ல வேண்டும்.
தொடர் படங்கள் :
இந்தியன் 2 படத்தை தொடர்ந்து இயக்குனர் மணிரத்னம் இயக்கத்திலும், பிரபாஸுக்கு வில்லனாக ப்ரொஜெக்ட் கே படத்திலும் நடிக்க கமிட் ஆகியுள்ளார். அதே போல ஹெச் வினோத் இயக்கத்தில் கமல் நடிக்கும் படத்தின் பிரி புரொடக்ஷன் பணிகள் வேகமெடுத்து வருகிறது. ஆம், அடுத்த மாதம் அல்லது செப்டம்பரில் இப்படத்தின் ஷூட்டிங் துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இணையும் முக்கிய பிரபலங்கள் :
விக்ரம் படத்தில் கமல் அவர்களுக்கு வில்லனாக நடித்த விஜய் சேதுபதி இதில் அவருடன் பயணிக்கும் ரோலில் நடிக்க உள்ளார் என்றும், யோகி பாபு நகைச்சுவை ரோலில் நடிக்க உள்ளதாக தகவல் கசிந்துள்ளது. இதனால் படத்தின் மீதான ஹைப் கூடி உள்ளது.