நீலகிரி மாவட்டம் ஊட்டியில் வரும் 13 முதல் 30ஆம் தேதி வரை ஹெலிடூரிசம் என்ற பெயரில், ஹெலிகாப்டர் சாகச சுற்றுலா நடத்தப்படும் என மாவட்ட நிர்வாகம் அறிவித்திருந்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து முருகவேல் என்பவர், சென்னை உயர்நீதிமன்றத்தில்; மனுத்தாக்கல் செய்தார். அதில், நீலகிரி மாவட்டத்தில் திடீர் திடீர் என்று காலநிலை மாறும் என்பதால் ஹெலிகாப்டரை இயக்குவது பாதுகாப்பில்லை என்று குறிப்பிட்டிருந்தார்.இந்த மனு மீதான விசாரணையின் போது, ஹெலிகாப்டர் சுற்றுலா நடத்துவது குறித்து எந்த இறுதி முடிவும் எடுக்கவில்லை என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. இதையடுத்து வரும் 17ஆம் தேதி இடைக்கால உத்தரவு பிறப்பிக்கப்படும் என உளர்நீதிமன்றம் அறிவித்துள்ளது.

ஒடிசா ரயில் விபத்து: காயமடைந்தவர்களை நேரில் சந்தித்து பிரதமர் மோடி ஆறுதல்.
ஒடிசா மாநிலம் பாலாசோர் மாவட்டத்தில் உள்ள பாஹாநாகா பஜார் ரயில் நிலையம் அருகே...
Read More