Mnadu News

ஹை டெக் திருடர்கள் மக்களே உஷார்! போலீசார் எச்சரிக்கை!

சென்னை ஊரப்பாக்கம், அய்யன்சேரியை சேர்ந்தவர் ஷெரில்கன் சால்வெஸ்‌. பிரபல தனியார் கல்லூரியில் படித்த பட்டதாரி என கூறிக் கொள்ளும் இவர் தாம்பரம் மாநகர காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் உள்ள பணம் பரிவர்த்தனை செய்யும் கடைகளில் உடனடியாக மருத்துவத் தேவைக்கு பணம் தேவை என கூறி பண பரிவர்த்தனையில் ஈடுபட்டுள்ளார்.

வழக்கமாக கடைக்காரருக்கு  கமிஷன் தொகையை  பணமாக தான் கொடுப்பார்கள். ஆனால் அவர் சில காரணங்கள் கூறி, QR கோடு வழியாக மீண்டும் அனுப்புகிறேன் என தெரிவித்து போலியாக கடைக்காரர்களிடம் காட்டி விட்டு சற்று நேரத்தில் வெளியே தயாராக இருக்கும் கள்ளக்காதலன் மோட்டார் சைக்கிளில் பறந்து விடுவார்.

இதே போல நேற்று மேற்கு தாம்பரத்தில் உள்ள ஒரு கடையில் 20 ஆயிரம் பணம் டிரான்ஸ்பார் செய்துவிட்டு தப்பி ஓட முயன்றுள்ளார். ஆனால், சுதாரித்துக் கொண்ட கடை ஊழியர் அந்த பெண்ணை மடக்கி பிடிக்கி முயன்றார். அப்போது அந்த பெண் கடை ஊழியரை தாக்கி தப்பி ஓட முயற்சிதுள்ளார். ஆனால் அருகில் இருந்த கடைக்காரர்கள் உதவியுடன், அந்த பெண்ணை மடக்கிப் பிடித்து தர்ம அடி கொடுதுள்ளனர். அதே சமயம் வெளியே இருந்த காதலன், அங்கிருந்து தப்பி ஓடியுள்ளான்.

பின்னர் பிடிப்பட்ட அந்த பெண்ணை தாம்பரம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். அவரிடம் போலீசார் விசாரித்து வருகின்றனர். விசாரணையில் இதே போல மாடம்பாக்கம் கோழிப்பண்ணை பகுதியைச் சேர்ந்த பாலா ஆனந்த் என்பவரிடம் கடந்த 7 ஆம் தேதி 15 ஆயிரம் பணம் money transfer மூலம் அனுப்பிவிட்டு கம்பி நீட்டி விட்டு சென்றுள்ளார்.

அதேபோல், சந்தோஷ்புரத்தில் உள்ள ஹப்பீஸ் என்பவரிடம் கடந்த வாரம் 20 ஆயிரத்தை இந்த டிப்டாப் ஜோடிகள் மோசடி செய்ததாக தெரிகிறது. இந்த பெண்ணால் ஏமாற்றப்பட்டவர்கள் நான்கு பெரும் சேலையூர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
அனைத்து புகார்களையும் பெற்று கொண்ட போலீசார் ஷெரில்கன் சால்வெஸ்‌ மீது வழக்குப்பதிவு செய்து ‌ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Share this post with your friends