விஜய், அஜித், சூரியா, கார்த்தி, ஜெயம் ரவி போன்ற பிரபலமான ஹீரோக்கள் அனைவரோடும் நடித்தவர் நடிகை தமன்னா. இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி என அனைத்து மொழிகளிலும் படங்களில் நடித்துள்ளார்.
நடிப்பதோடு மட்டும் இல்லாமல் விளம்பரங்கள், வெப் தொடர்கள், விழாக்களில் பங்கேற்பது, சுயதொழில் என ஒரு புறம் இதையும் வெற்றிகரமாக செய்து வருகிறார். சென்ற வருடம் இவர் நடிப்பில் வெளியான ” நவம்பர் ஸ்டோரி” என்கிற வெப் தொடர் ஓடிடி யில் வெளியாகி நல்ல பெயரை அவருக்கு பெற்று தந்தது.
எப்போதுமே தமன்னா சுறுசுறுப்பாக சமூக வாலைதங்களில் ஆக்டிவாக இருப்பவர். அடிக்கடி ஃபோட்டோ ஷூட்டை நடத்தி அழகிய புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை உற்சாகம் அடைய செய்வார். அப்படி தான் நேற்று அவரின் இன்ஸ்டா பக்கத்தில் சில புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை வாய்பிளக்க வைத்துள்ளார்.