Mnadu News

அசாம் எண்ணெய் மற்றும் எரிவாயு வயல்களை மேம்படுத்த ரூ 600 கோடி முதலீடு : ஆயில்மேக்ஸ் எனர்ஜி முடிவு.

மும்பையில் செய்தியாளர்களிடம் பேசியுள்ள ஆயில்மேக்ஸ் எனர்ஜி நிறுவனத்தின் நிறுவனர் கபில் கர்க்;, எங்களிடம் அஸ்ஸாமில் அம்குரி, துவர்மாரா மற்றும் திபுக் ஆகிய மூன்று இடங்களில் எண்ணெய் வயல்கள் உள்ளது. தற்போது, அம்குரி எண்ணெய் வயலில் ஒரு நாளைக்கு 2 லட்சத்து 50 ஆயிரம் கன மீட்டர் எரிவாயும்; 500 பீப்பாய்கள் கச்சா எண்ணெயும் உற்பத்தி செயப்படு;கிறது. இந்த நிலையில், அசாமில் உள்ள எங்களது எண்ணெய் மற்றும் எரிவாயு வயல்களை மேம்படுத்த 600 கோடி ரூபாய் முதலீடு செய்ய உள்ளோம். அதையடுத்து, விரைவில் அஸ்ஸாம் மாநிலத்தில் உள்ள அம்குரியில் இருந்து ஒரு நாளைக்கு நான்கு மடங்கு முதல் ஒரு மில்லியன் கன மீட்டர் வரை எரிவாயு உற்பத்தி அதிகரிக்கப்படும் என்று கூறியுள்ளார்.

Share this post with your friends