வாரிசு திரைப்படத்தை முடித்த கையோடு விஜய் ஒரு வாரத்துக்கு வெளிநாடு சுற்றுப்பயணம் செல்கிறார். அவர் வந்தவுடன் தளபதி 67 படப்பிடிப்பு துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த தகவல் விரைவில் அதிகாரப்பூர்வமாக உறுதி ஆக உள்ளது.
லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார் என்றும், அனிருத் இசை என்பது குறிப்பிடத்தக்கது. இது விஜய் ரசிகர்களுக்கு பெரிய மகிழ்ச்சியை கொடுத்த நிலையில், தற்போது மேலும் ஒரு சர்ப்ரைஸ் நியூஸ் கசிந்துள்ளது.
தெறி, மெர்சல், பிகில் பிளாக் பஸ்டர் படங்களின் இயக்குநர் அட்லீயுடன் விஜய் இணைய உள்ளது பெரும்பாலும் உறுதி ஆகியுள்ளது. தற்போது ஷாருக்கான் நடிக்கும் ஜவான் படத்தில் அட்லீ பிஸியாக உள்ளார். இதை முடித்த உடன் விஜய் 68 பணிகள் துவங்கும் என்றும், விவேக் பாடல்கள் எழுதுவார் என்றும், அனிருத் இசை அமைப்பார் என்றும் தகவல் கசிந்துள்ளது. இந்த படத்தை மைதிரி நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரிக்க உள்ளது. இதற்காக விஜய், அட்லீ, அனிருத் மூவருக்கும் பெரிய தொகை பேசப்பட்டுள்ளது எனவும் சொல்லப்படுகிறது. இப்படம் அடுத்த வருட இறுதியில் துவங்கப்பட உள்ளது.