வசந்த பாலன்:
வெய்யில், அங்காடித் தெரு போன்ற படங்களின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களின் கவனம் ஈர்த்த இயக்குநர் வசந்த பாலன் என்றால் அது மிகையாகாது. ஆம், இந்த இரண்டு படங்களுமே இவரின் கிராஃப்ட் ஐ எடுத்து கூறியது. கதையோடு ஒன்றிய பாடல்கள், வசனங்கள், காட்சி அமைப்புகள் போன்றவை பெரிதும் பேசப்பட்டன. பின்னர், அவர் இயக்ககத்தில் வெளியான எந்த படங்களுமே லாபத்தை ஈட்டவில்லை. அரவான், காவியத் தலைவன் போன்ற படங்கள் பாக்ஸ் ஆபீஸில் ஷோபிக்க தயங்கின.
தொடர் தோல்விகள்:
ஆனால், அண்மையில் இவர் இயக்கத்தில், ஜி வி பிரகாஷ் குமார் இசையமைத்து நடித்த திரைப்படமான “ஜெயில்”, குப்பத்தில் வாழும் இளைஞர்கள் எவ்வாறு போதை பொருட்கள் பயன்பாட்டால் அழிவை நோக்கி செல்கிறார்கள் என்கிற செய்தியை பதிவு செய்து இருப்பார். இந்த படம் பல நல்ல விமர்சனங்களை அவருக்கு பெற்று தந்தது.
அநீதி – எஸ் பிக்சர்ஸ்:
தற்பொழுது, அர்ஜுன் தாஸ் லீட் ரோலில் உருவாகி உள்ள படம் தான் “அநீதி”. ஜி வி. பிரகாஷ் குமார் இப்படத்துக்கு இசை அமைத்துள்ளார். ஹாரர் திரில்லர் வகை படமாக இப்படம் உருவாகி உள்ளது. பல வருடங்களுக்கு பிறகு எஸ் பிக்சர்ஸ் இப்படத்தை வெளியிடுகிறது. வரும் ஜூலை 21 அன்று “அநீதி” தமிழகமெங்கும் வெளியாக உள்ளது குறிப்பிடதக்கது.