பால் உற்பத்திக்கு பெயர்பெற்ற டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள சவுத்போர்க் பால் பண்ணையில் திடீரென தீ விபத்து நிகழ்ந்தது. தீ மளமளவென பண்ணை முழுவதும் பரவி வெடி விபத்தாக மாறியது.இதில், பண்ணையின் கொட்டகையில் அடைக்கப்பட்டிருந்த 18 ஆயிரம் பசுக்கள் தீயில் கருகி உயிரிழந்தன. இதில், பலத்த காயங்களுடன் மீட்கப்பட்ட ஊழியர் ஒருவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். அந்த பகுதி முழுவதும் கரும் புகை சூழ்ந்து கொண்டது.தகவல் அறிந்து விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள், நீண்ட நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டுவந்தனர்.கழிவுகளை உறிஞ்சும் மின்சாதனங்கள் அதிக சூடாகி வெளிப்பட்ட தீப்பொறியால், பண்ணையில் இருந்து மீத்தேன் வாயு பற்றி எரிந்து விபத்து நேர்ந்திருக்கலாம் என கூறப்படுகிறது.இதுகுறித்து டெக்சாஸ் தீயணைப்பு அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருவண்ணாமலையில் மண்சரிவு: ரூ.5 லட்சம் நிவாரணம் அறிவிப்பு
திருவண்ணாமலை மண்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் நிவாரண நிதி...
Read More