Mnadu News

அமெரிக்காவைப் பழிவாங்குவோம்: வட கொரியாவில் லட்சக்கணக்கானோர் திரண்டு சூளுரை.

வட கொரிய அரசு ஊடகம் வெளியிட்ட செய்தியில், கொரிய போர் தொடங்கப்பட்டதன் 73-வது நினைவு நாளை வட கொரியாவினர் அனுசரித்தனர் இதில்,1 லட்சத்து 20 ஆயிரம் மக்கள், மாணவர்கள் இந்தப் பேரணியில் கலந்து கொண்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே நேரம், அரசு செய்தி நிறுவனம் வெளியிட்ட புகைப்படத்தில் மக்கள் தங்களின் கைகளில் அமெரிக்காவுக்கு எதிரான கோஷங்களுடன் கூடிய பதாகைகளை வைத்திருப்பதை ஆவணப்படுத்தியிருந்தது.அந்த பதாகைகளில்,”ஒட்டுமொத்த அமெரிக்க நிலப்பரப்பும் எங்களின் துப்பாக்கிகளின் வீச்சுக்குள் இருக்கின்றது”, “எதேச்சதிகார அமெரிக்கா அமைதியை அழிக்கும் தேசம்”, “அமெரிக்காவை அழிக்க பழிவாங்கும் போரை நடத்துவோம்” போன்ற வாசகங்கள் கொண்ட பதாகைகளை மக்கள் வைத்திருந்தனர்.

Share this post with your friends