Mnadu News

அரிக்கொம்பன் யானையை மீட்டுத்தாருங்கள்: போராடும் பழங்குடியின மக்கள்.

கேரள மாநிலம், இடுக்கி மாவட்டத்துக்குட்பட்ட சின்னக்கானல் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியில் பிறந்த அரிக்கொம்பனை, வனத்துறையினர், திருநெல்வேலி மாவட்ட வனப்பகுதியில் விட்டனர்.இந்த நிலையில், இடுக்கி மாவட்டத்தில் ஐந்து பஞ்சாயத்துகளைச் சேர்ந்த பழங்குடியின மக்கள், நாங்கள் யாரும் அரிக்கொம்பனை பிடிக்குமாறு புகார் கொடுக்கவில்லை. உடனடியாக கேரள வனத்துறை தமிழகத்திலிருந்து அரிக்கொம்பனை மீட்டு இங்கு கொண்டு வர வேண்டும்.ஒருவேளை அரிக்கொம்பனை மீட்டு அழைத்து வராவிட்டால் போராட்டம் தீவிரப்படுத்தப்படும். சின்னக்கானல் பகுதியிலேயே அரிக்கொம்பனை மீண்டும் கொண்டு வந்து விட வேண்டும் என்று பழங்குடியின மக்கள் வலியுறுத்தி வருகிறார்கள்.அரிக்கொம்பன் இங்கு வராவிட்டால், யாரும் வாக்கு கேட்டு இங்கு வர முடியாது. வரும் தேர்தலையே ஒட்டுமொத்தமாக புறக்கணிப்போம் என்றும் பழங்குடியின மக்கள் ஆவேசத்துடன் கூறியுள்ளனர்.

Share this post with your friends