Mnadu News

அறந்தாங்கி அருகே பள்ளிக்கு கல்வி சீர் வழங்கும் விழா

அறந்தாங்கி அருகே சுனையக்காடு கிராமத்திலுள்ள அரசு உயர்நிலை பள்ளிக்கு 3 லட்சம் மதிப்பிலான பொருட்கள் கல்விசீர் வழங்கும்விழா நடைபெற்றது.

சுனையக்காடு கிராமத்திலுள்ள அரசு உயர்நிலை பள்ளிக்கு கிராம பொதுமக்கள் சார்பாக பள்ளிக்கு தேவையான பொருட்களை சீர்வரிசையாக எடுத்து வந்து பள்ளி ஆசிரியர்களிடம் வழங்கினர்.

பள்ளிக்கு தேவையான பொருட்களாகிய முதலுதவிபெட்டி, பீரோ, மின்விசிறி, குடிநீர்தொட்டி, சோலார் இன்வர்டர், சோபாசெட், பிளாஸ்டிக்சேர்கள், சில்வர் குடம் , சில்வர் டம்ளர் ,மற்றும் விளையாட்டு உபகரணங்களாகிய கிரிக்கெட்பேட், ஹாக்கி பேட், காரக் பந்து, இறகு பந்து,புத்தகம் வைக்கும் அலமாரி , பாய், மேலும் ஏராளமான பொருட்களை சீர்வரிசையாக எடுத்து வந்தனர்.

கிராமத்திலுள்ள மாரியம்மன் கோவிலில் இருந்து ஊர்வலமாக எடுத்து வரப்பட்ட பொருட்கள் பள்ளி ஆசிரியர்களிடம் வழங்கப்பட்டது. சீர்வரிசை எடுத்து வந்த கிராம மக்களை பள்ளி மாணவிகள் ஆராத்தி எடுத்து கை தட்டி வரேவேற்றனர்.

நிகழ்ச்சியில் பள்ளி தலைமையாசிரியர் தம்பிதுரை, ஆசிரியர்கள் ஜெகதிஷ்,  வெள்ளைசாமி, கிருஷ்ணசாமி, மற்றும் ஆசிரியைகள் மாசிலாமணி, மலர்விழி, தேவி, பொன்மதி, உட்பட கிராம பொதுமக்கள், இளைஞர்கள், மாணவ, மாணவிகளின் பெற்றோர்கள் உறவினர்கள்  என பலரும் பெரும் திரளாக கலந்து கொண்டனர்.

மேலும் வரும்ஆண்டு இதே போல் இரண்டு மடங்கு அளவுக்கு சீர்வரிசை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டது .

Share this post with your friends