காஞ்சிபுரம் அருகே, காஞ்சிபுரம்-வேலூர் நெடுஞ்சாலையில் ஒலிமுகமது பேட்டை விநாயகபுரம் பகுதியில்,காஞ்சிபுரத்தில் இருந்து கீழம்பி நோக்கி சென்ற பயணிகள் ஆட்டோ மீது விநாயகபுரம் கூட்டுச்சாலையில் வந்த மற்றுமொரு பயணிகள் ஆட்டோ நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.
ஆட்டோ நேருக்கு நேர் மோதிய விபத்தில் ஆட்டோ டிரைவர்கள் பிரேம்குமார் (23), குரு (19) ,மற்றும் பயணிகள் அபூர்வம்மாள்( 65), பள்ளி சிறுவன் என 4 பேர் படுகாயம் அடைந்தனர். இந்த நிலையில் அக்கம்பக்கத்தினர் விரைந்து சென்று நான்கு பேரையும் மீட்டு அவசர ஊர்தி மூலம் காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர்.
இந்த விபத்து குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற பாலுச்செட்டி சத்திரம் போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு, சாலையில் ஏற்பட்ட போக்குவரத்து பாதிப்பை சரி செய்தனர்.