Mnadu News

ஆப்கன் தலிபான்கள் ஆட்சியில் 1,000 பேர் தாக்குதல்களில் உயிரிழப்பு: ஐ.நா. தகவல்.

ஆப்கானிஸ்தானில் உள்ள ஐ.நா. அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில், ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் 2021, ஆகஸ்டில் ஆட்சியைக் கைப்பற்றினர். அன்று முதல் கடந்த மே மாத இறுதி வரை தாக்குதல்கள், வன்முறையில் பொதுமக்கள் ஆயிரத்து 95 பேர் கொல்லப்பட்டுள்ளனர். சுமார் 2ஆயிரத்து 700 பேர் காயமடைந்துள்ளனர். இதில் பெரும்பாலான தாக்குதல்கள் பயங்கரவாதிகளால் தயாரிக்கப்பட்ட வெடிகுண்டுகளால் நிகழ்த்தப்பட்டுள்ளன. வழிபாட்டுத் தலங்கள், பள்ளிகள், சந்தைப் பகுதி உள்ளிட்ட பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களைக் குறிவைத்து தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share this post with your friends