உலகின் பழமையான கிராண்ட் ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான விம்பிள்டன் டென்னிஸ் போட்டிகள், 1877-ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வருகின்றன. ஆரம்பத்தில் ஆண்களுக்கான பிரிவில் மட்டுமே போட்டி நடத்தப்பட்டது. பின்னாளில் 1884-ஆம் ஆண்டுமுதல் பெண்கள் பிரிவிலும் போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன. புல்தரையில் நடத்தப்படும் ஒரே கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் போட்டி இதுவாகும். இம் மைதானத்தில் உள்ள புற்கள் 8 மில்லிமீட்டர் உயரத்துக்கு பராமரிக்கப்பட்டு வருகின்றன.
மற்ற டென்னிஸ் போட்டிகளில் எல்லாம், எந்த நிறத்தில் வேண்டுமானாலும் வீரர்களும் வீராங்கனைகளும் உடை அணியலாம். ஆனால் விம்பிள்டன் போட்டியைப் பொறுத்தவரை வெள்ளை நிறத்தில் மட்டும்தான் உடை அணிய வேண்டும் என்ற விதி உள்ளது.
இந்த விதியால் தாங்கள் மாதவிடாய் காலத்தில் விளையாட நேரிடும்போது மன உளைச்சலுக்கு ஆளாவதாக வீராங்கனைகள் நீண்ட காலமாக கவலை தெரிவித்து வந்தனர். இந்நிலையில் விம்பிள்டன் போட்டியை நடத்தும் ஆல் இங்கிலாந்து கிளப் ஆடைக் கட்டுப்பாட்டை தளர்த்தியுள்ளது. இனி வீராங்கனைகள் அடர் நிற அண்டர் ஷார்ட்ஸ் அணியலாம். ஆல் ஒயிட் ஆடைக் கட்டுப்பாடு விலக்கிக் கொள்ளப்படுகிறது என்று தெரிவித்துள்ளது.
திருவண்ணாமலையில் மண்சரிவு: ரூ.5 லட்சம் நிவாரணம் அறிவிப்பு
திருவண்ணாமலை மண்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் நிவாரண நிதி...
Read More