உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில் வெளிவந்த இந்தியன் படத்தின் முதல்பாகம் பிரம்மாண்ட வரேவேற்பை பெற்றது. AM ரத்தினம் தயாரிப்பில் இயக்குனர் சங்கர் இயக்கத்தில் உருவாக்கப்பட்ட இந்த படம் வணிக அளவில் பிளாக் பஸ்டர் கொடுத்ததோடு மட்டும் அல்லாமல் பல விருதுகளை அள்ளிச் சென்றது .
இந்தியன் 2 படத்தில் நடிக்கப்போவதாக கமல் தொகுத்துவந்த பிக் பாஸ் நிகழ்ச்சியின் போது அறிவிப்பை வெளியிட்டார் , மேலும் தனது நடிப்பில் வெளிவர உள்ள கடைசி படம் இந்தியன் 2 என்றும் அதன் பின்னர் ,முழுநேர அரசியல் பயணத்தில் ஈடுபடவுள்ளதாக அவர் கூறியுள்ளதால் ரசிகர்கள் மத்தியில் இந்த படத்தின் எதிர்பார்ப்பு மேலும் கூடியுள்ளது .
இந்த நிலையில் இந்தியன் 2 படமானது ஷங்கர் இயக்கத்தில் ,லைக்கா நிறுவனம் தயாரிப்பில் , காஜல் அகர்வால் கதாநாயகியாகவும், சுசி பே என்ற வட கொரியன் நடிகையும் , நெடுமுடி வேணு மற்றும் டெல்லிகணேஷ் போன்ற பல பிரபலம் நடிக்க உள்ள இந்த படத்தில் மேலும் ஒருவர் கைக்கோர்த்துள்ளது .
சமீபத்தில் வெளியாக உள்ள எல் .கே .ஜி படத்தின் கதாநாயகன் ஆர் .ஜே பாலாஜி தான் அவர். இவரும் அரசியல் கருத்தை கொண்டு படம் எடுத்ததாலே இந்தியன் 2 படத்தில் இவருக்கு வாய்ப்பு கிடைத்தது என்றே கருதலாம் .
இதை உறுதிப்படுத்தும் வகையில் தகவல்கள் அதிகார பூர்வமாக வெளிவந்தால் கமல் மற்றும் சங்கர் படத்தில் முதல் முறையாக ஆர்.ஜே.பாலாஜி நடிப்பார் என்பது குறிப்பிடத்தகுந்தது .
இந்த வருடம் படப்பிடிப்பை தொடங்கியுள்ள இந்தியன் 2 படம் 2019 யில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது .