உச்ச நீதிமன்ற நீதிபதிகள் டி.ஒய். சந்திரசூட் மற்றும் நீதிபதி ஹிமா கோஹ்லி ஆகியோர் கொண்ட அமர்வு, பாலியல் பலாத்கார வழக்கு விசாரணையின் போது, ஒருவரின் பாலியல் வரலாற்றை அறிந்து கொள்ள இருவிரல் சோதனை உதவும் என்பதற்கு இதுவரை எந்த அறிவியல்பூர்வ உறுதித்தன்மையும் இல்லை மாறாக, இது பாதிக்கப்பட்ட நபரை மீண்டும் அதிர்ச்சிக்குள்ளாக்கவே செய்யும் என்றும், பாதிக்கப்பட்ட நபருக்கு எந்த தனியொருவரும் இருவிரல் சோதனை நடத்துவது என்பது, அவரை தவறாக நடத்த முயன்றவராகக் கருதுவதற்கு உரியவராகிறார் என்றும் குறிப்பிட்டுள்ளது.
மத்திய, மாநில அரசுகள், உடனடியாக அனைத்து அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பி, அவர்களது மருத்துவக் கல்வியில், இருவிரல் பரிசோதனை நீக்கப்பட்டது குறித்து பதிவு செய்யுமாறு அறிவுறுத்தவும்; வலியுறுத்தி உள்ளனர்.
அதோடு பாலியல் பலாத்கார வழக்கில், குற்றவாளியை விடுதலை செய்து ஜார்க்கண்ட் உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்தும், குற்றவாளி என்று அறிவித்து விசாரணை நீதிமன்றம் பிறப்பித்த தீர்ப்பை உறுதி செய்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
திருவண்ணாமலையில் மண்சரிவு: ரூ.5 லட்சம் நிவாரணம் அறிவிப்பு
திருவண்ணாமலை மண்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் நிவாரண நிதி...
Read More