மேற்கு வங்க மாநிலத்தில் நிரந்தர ஆசிரியர் பணி நியமனத்தில் நடந்த ஊழல் தொடர்பான வழக்கில், திரிணமுல் கட்சியின் எம்.எல்.ஏ. மாணிக் பாட்டாச்சர்யா ஏற்கனவே, கைது செய்யப்பட்டார். அவரை தொடர்ந்து ஆளும் திரிணமுல் காங்கிரஸ் எம்.எல்.ஏ. ஜிபான் கிருஷ்ண சகா சி.பி.ஐ. அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். தற்போது அவர்களிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.இந்த நிலையில், முதல் அமைச்சர்; மம்தா பானர்ஜியை பாஜக தலைவர் சுவேந்து அதிகாரி கடுமையாக விமர்சித்துள்ளார். இது தொடர்பாக டிவிட்டரில் அவர் பதிவிட்டுள்ள பதிவில், உங்கள் எம்எல்ஏக்கள் ஊழல் வழக்கில் சிக்கி கைது செய்யப்பட்டனர்.ஆனால், நீங்கள் குற்றவாளிகளைப் பாதுகாக்கிறீர்கள் மற்றும் சட்டவிரோதமாக நிரந்தர ஆசிரியர் பணி நியமனம் செய்யப்பட்டவர்களுக்கு உங்கள் ஆதரவை மீண்டும் குரல் கொடுக்கிறீர்கள். இது மிகவும் அவமானம், நீங்கள் ஊழல் கூட்டின் ராணி தேனீ” என கடுமையாக விமர்சித்து பதிவிட்டுள்ளார்.
திருவண்ணாமலையில் மண்சரிவு: ரூ.5 லட்சம் நிவாரணம் அறிவிப்பு
திருவண்ணாமலை மண்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் நிவாரண நிதி...
Read More