நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் இந்த ஆண்டு குளிர்காலத்தின் தாக்கம் அதிகமாக காணப்படுகிறது. காலை நேரங்களில் சாலைகளில் பனிமூட்டம் சூழ்வதால் பல்வேறு நெடுஞ்சாலைகளில் கோர விபத்துகள் நிகழ்ந்து வருகின்றது. இந்நிலையில், இந்திய – பாகிஸ்தான், இந்திய – சீன எல்லைகளில் கடுமையான பனிமூட்டமும், குளிரும் ஏற்பட்டுள்ளதால், பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருக்கும் வீரர்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.
இந்த சூழலை பயன்படுத்தி பாகிஸ்தான் பகுதிகளிலிருந்து டிரோன்கள் மூலம் போதைப் பொருள்களை அனுப்பும் செயல் அதிகரித்துள்ளது. இந்திய எல்லைப் பாதுகாப்புப் படையினரால் கடந்த சில நாள்களில் அதிகளவிலான டிரோன்கள் சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளன.
குறிப்பாக பஞ்சாப் மாநிலத்தில் உள்ள அட்டரி-வாகா எல்லையில் 10 மீட்டர் தொலைவில் இருப்பவர்கள் கூட தெரியாத அளவிற்கு கடுமையான பனிமூட்டம் ஏற்பட்டுள்ளது.
இந்த சூழலை பயன்படுத்தி எல்லை தாண்டி தீவிரவாதிகள் ஊடுருவ அதிக வாய்ப்பிருப்பதால் ரோந்து பணிகளை எல்லை பாதுகாப்புப் படையினர் தீவிரப்படுத்தியுள்ளனர்.
திருவண்ணாமலையில் மண்சரிவு: ரூ.5 லட்சம் நிவாரணம் அறிவிப்பு
திருவண்ணாமலை மண்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் நிவாரண நிதி...
Read More