ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெறும் 48-வது லீக் ஆட்டத்தில் மும்பை – லக்னோ அணிகள் மோத உள்ளன.
ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் லக்னோவில் இன்று (செவ்வாய்க்கிழமை) நடைபெறும் 48-வது லீக் ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ், முன்னாள் சாம்பியன் மும்பை இந்தியன்சுடன் மோதுகிறது. சிக்கலின்றி அடுத்த சுற்று வாய்ப்பில் நீடிக்க இரு அணிகளும் கடுமையாக மல்லுக்கட்டும் என்பதால் இந்த ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு குறைவு இருக்காது.இந்திய நேரப்படி ஆட்டம் இரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது.