Mnadu News

கங்கைகொண்ட சோழபுரத்தில் அருங்காட்சியகம்: மு.க. ஸ்டாலின் அறிவிப்பு.

அரியலூர் மாவட்டம் கொல்லாபுரத்தில் அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய தமிழக முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின், பல்வேறு பெருமைகளுக்கு உரிய மாவட்டம் அரியலூர். அதோடு, அரியலூர் மற்றும் பெரம்பலூர் மாவட்டங்களில் புதை படிம பூங்காக்கள் அமைக்கப்படும். அரியலூர் போன்றே பெரம்பலூரிலும் வரலாற்றச் சிறப்பு மிக்க அம்சங்கள் உள்ளன. கங்கைகொண்ட சோழபுரத்தில் அருங்காட்சியகம் அமைக்கப்படும். தொல்லியல்துறையில் ஒரு மறுமலர்ச்சியையே உருவாக்கியுள்ளோம் என்றார்;. தமிழகத்தில் போட்டி போட்டுக் கொண்டு தொழில் நிறுவனங்கள் முதலீடு செய்ய முன்வருகின்றன. இந்தியாவிலேயே அதிக தொழிற்சாலைகளைக் கொண்ட மாநிலமாக தமிழகம் உள்ளது என்றும் ஸ்டாலின் கூறினார்.

Share this post with your friends