Mnadu News

கனிமொழி எம்பி வீட்டில் நுழைந்த மர்ம நபர்களால் பரபரப்பு

தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி எம்பி தங்கியிருக்கும் ஐயப்பன் நகர் பகுதியில் உள்ள வீட்டில் நேற்று மர்ம நபர் உள்ளே நுழைந்து திருட முயன்றுள்ளனர். இதுகுறித்து அங்கிருந்த பணியாளர்கள் அளித்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற காவல்துறையினர் விசாரணை நடத்தினர். தூத்துக்குடி பாராளுமன்ற கனிமொழி எம்பி வீட்டில் மர்ம நபர் அத்துமீறி உள்ளே நுழைந்ததை தொடர்ந்து அவரது வீட்டிற்கு ஆயுதப்படை சேர்ந்த 4 காவலர்கள் பாதுகாப்புக்காக பணியமர்த்தப்பட்டுள்ளனர்.இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Share this post with your friends