கரூர் மாவட்டம் கோவை சாலையில் உள்ள தனியார் ஓட்டலில் இந்திய தொழில் முனைவர் கூட்டமைப்பு சார்பில் மாவட்ட ஆட்சியர் டாக்டர் பிரபு சங்கர் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அதன் பின்னர் தொழில் முனைவோர் கூட்டமைப்பின் கரூர் மாவட்ட தலைவர் வெங்கடேசன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது தெரிவித்த அவர் கரூரில் நவம்பர் 4,5,6 ஆகிய தேதிகளில் சர்வதேச முருங்கை கண்காட்சி நடைபெற உள்ளது என்றும் இந்த கண்காட்சியில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து முருங்கை விவசாயிகள்,தொழில் முனைவோர்கள் மற்றும் சர்வதேச அளவில் பிரேசில், ஜப்பான், உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் இருந்து தொழில் முனைவோர்கள் பங்கேற்க உள்ளதாக தெரிவித்தார்.
திருவண்ணாமலையில் மண்சரிவு: ரூ.5 லட்சம் நிவாரணம் அறிவிப்பு
திருவண்ணாமலை மண்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் நிவாரண நிதி...
Read More