Mnadu News

காசி-தமிழ்ச் சங்கமம்: வரும் 19-இல் பிரதமர் தொடங்கிவைக்கிறார்.

காசி தமிழ்ச் சங்கமம் நிகழ்ச்சிக்கு மத்திய அரசு ஏற்பாடு செய்துள்ளது. வரும் 19-ஆம் தேதி தொடங்கி ஒரு மாத காலம் நடைபெற உள்ளது. மத்திய அரசின் ரயில்வே, சுற்றுலா, கலாசார துறைகள் இந்நிகழ்ச்சியை ஒருங்கிணைத்துள்ளது.
வாராணசியில் பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தின் ஆம்பிதியேட்டர் மைதானத்தில் இந்த சங்கமம் கோலாகலமாக நடைபெற உள்ளது.
வாராணசிக்கும் தமிழகத்துக்கும் இடையே கலாசார தொடர்புகளைப் புதுப்பிக்கும் நோக்கில் காசி-தமிழ்ச் சங்கமம் வாராணசியில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
ஒரே நாடு ஒரே அமைப்பு என்ற உணர்வைக் கொண்டாடுவது மற்றும் தமிழ் மொழி மற்றும் கலாசாரத்தை முன்னிலைப்படுத்துவது இந்த நிகழ்ச்சியின் நோக்கமாகும்.
வரும் 17 ஆம் தேதி முதல் டிசம்பர் மாதம் 16 ஆம் தேதி வரையிலான இந்த சங்கமத்தை காசிக்கும் (வாரணாசி) தமிழ்நாட்டுக்கும் இடையே உள்ள பல நூற்றாண்டுகள் பழமையான அறிவுப் பிணைப்பையும், பழங்கால நாகரிகத் தொடர்பையும் மீண்டும் கண்டறியும் முயற்சியாகும்.
நிகழ்ச்சி ஏற்பாடுகளை முதல் அமைச்சர் ஆதித்யநாத் மற்றும் அதிகாரிகளுடன் இணைந்து நடத்தி வருகின்றனர்.

Share this post with your friends