Mnadu News

காஷ்மீருக்கு சட்டமன்றத் தேர்தல் இல்லை – அரசியல் தலைவர்கள் கண்டனம்

புல்வாமா தாக்குதல் சர்ச்சை காரணமாக இந்தியா பாக்கிஸ்தான் இடையே போர் மூழும் சூழல் ஏற்பட்டு ஒரு வழியாக தணியும் தருவாயில் இருக்கிறது.

இந்தச் சூழலில் மக்களவைத் தேர்தலோடு சில மாநிலங்களுக்கு சட்டமன்றத் தேர்தலும் இணைத்து நடத்தப்படுவதாக தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது.

ஆனால் அதற்கு காஷ்மீருக்கு மட்டும் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு பிரச்சினைகள் காரணம் காட்டி தான் காஷ்மீருக்கு சட்டமன்றத் தேர்தல் குறித்த அறிவிப்பு வெளியாகவில்லை.

இதுகுறித்த கருத்து தெரிவித்துள்ள அரசியல் கட்சித் தலைவர்கள் . நாடாளுமன்றத் தேர்தல் நடத்த மட்டும் பாதுகாப்பான சூழல் இருக்கிறது. ஆனால் சட்டமன்றத் தேர்தல் நடத்த ஏற்றச் சரியான சூழல் இல்லை என்பதை ஏற்க இயலாது.

மேலும் மக்களவைத் தேர்தலுக்காகத் தான் காஷ்மீரை வைத்து இந்தியா பாகிஸ்தான் பிரச்சினை மூட்டப்படுவதாக தேசிய மாநாட்டுக் கட்சியின் தலைவர் பரூக் அப்துல்லா கருத்து தெரிவித்துள்ளார்.

Share this post with your friends