Mnadu News

கிறிஸ்தவ மதம் மாறி மீண்டும் இந்து மதம் திரும்பிய மக்கள்.

மத்திய பிரதேசத்தின் தமோ மாவட்டத்தில் சில நாட்களுக்கு முன்பு இந்து மதத்தினர் 300 பேர் வரை கிறிஸ்தவ மதத்திற்கு மாறியுள்ளனர். இந்நிலையில், அவர்கள் அந்த மதத்தில் இருந்து மீண்டும் இந்து மதத்திற்கு திரும்பியுள்ளனர். அவர்களுக்கு பாகேஷ்வர் தம் பீடாதிபதி தீரேந்திர கிருஷ்ண சாஸ்திரி முன்னிலையில் மதமாற்ற சடங்குகள் செய்து வைக்கப்பட்டன. இந்த நிகழ்ச்சியின்போது, வருங்காலத்தில் வேறு எந்தவித தூண்டல்களுக்கும் அடிபணிந்து விட கூடாது என உறுதிமொழி எடுத்து கொள்ளும்படி அவர்களிடம் கேட்டு கொள்ளப்பட்டு உள்ளது. ராமகாதை சொற்பொழிவின் நடுவே இந்நிகழ்ச்சி நடந்தது. இதில் பங்கேற்ற ஒருவர் கூறும்போது, வேறொரு மதத்திற்கு மாறும்படி என்னை தூண்டி விட்டு, கவர்ந்தனர். எனக்கு பண வசதிகளும் அளிக்கப்பட்டன. கடைசியில் அறிவற்ற செயலை நான் உணர்ந்தேன் என அவர் கூறியுள்ளார். இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மற்றொருவர் கூறும்போது, எனது மகனின் சிகிச்சைக்கான மருத்துவ செலவுகள் ஏற்கப்படும் என உறுதிமொழி அளித்தனர். எனக்கும் பணமும் தர முன்வந்தனர். ஆனால் இறுதியில், ஏமாற்றப்பட்டேன் என உணர்ந்தேன். அது எனது மிக பெரிய தவறின் ஒரு பகுதி என்றும் உணர்ந்தேன் என்று கூறியுள்ளார்.

Share this post with your friends