Mnadu News

கோடைகால குடிநீர் அபாயத்தை நீக்க மினி லாரி தொடங்கினார் ;அமைச்சர் எஸ் .பி  வேலுமணி

 

Image result for sp velumani

கோடை காலத்தில்  நிலவும்  குடிநீர்  தட்டுப்பாட்டை சரி செய்ய  சென்னையில்  மினி  லாரி  சேவையை தொடங்க  இருப்பதாக  அமைச்சர் எஸ் .பி  வேலுமணி  கூறியுள்ளார் .

இந்த ஆண்டு  பருவமழை அளவு  குறைவாக  பெய்ததால்  தண்ணீர்  தட்டுப்பாடு  ஏற்படக்கூடிய  அபாயம்  உள்ளது. இதனால்  தமிழகம்  மற்றும்  சென்னை உள்ளிட்ட நகரங்களில்   ஏற்படும் குடிநீர் தட்டுப்பாட்டை போக்க  அரசு  பல்வேறு  முயற்சிகள் ஈடுபட்டு  வருகின்றது.

இந்த நிலையில் சென்னையில்  குடிநீர்  தட்டுப்பாட்டை  சரி செய்யும் வகையில்  அமைச்சர்        எஸ் .பி  வேலுமணி  அவர்கள் குடிநீர் எடுத்து  செல்லும்  மினிலாரி  ஒன்றை தொடங்கி வைத்தார். மேலும் அவர்  செய்தியாளர்கள்  சந்திப்பில்  அவர் கூறியதாவது, சென்னையில்  குடிநீர்  தட்டுப்பாடு  ஏற்படாத   வண்ணம்   நாள்  ஒன்றுக்கு  550  மில்லியன்  லிட்டர்  தண்ணீர் வழங்கப்படுவது  என  உறுதி அளித்துள்ளார் .

மேலும்  சென்னையில்  குடிநீர் தட்டுப்பாடு  ஏற்படாத  வகையில்  பல்வேறு   நடவடிக்கைகள்  அரசின்  சார்பில்  முயற்சிகள்  எடுக்கப்படும்   என   அவர்  கூறியுள்ளார் .

 

Share this post with your friends