Mnadu News

கௌரவ விரிவுரையாளர்களுக்கு ஊதிய உயர்வு: சென்னை பல்கலைக்கழகம் அறிவிப்பு.

சென்னை பல்கலைக்கழகத்தின் பதிவாளர் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையின்படி, சென்னை பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் கௌரவ விரிவுரையாளர்களுக்கான ஊதியம் 20 ஆயிரம் ரூபாயில் இருந்து 30 ஆயிரம் ரூபாய் ஆக உயர்த்தப்படுகிறது. கற்பித்தல் மற்றும் ஆராய்ச்சி மாணவர்களுக்கான ஊதியம் 15ஆயிரம் ரூபாயில் இருந்து 20 ஆயிரம் ரூபாய் ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது. கடந்த மார்ச் மாதம் பல்கலைக்கழக நிதிக்குழு இதற்கு ஒப்புதல் வழங்கியுள்ளதாகவும் இந்த ஊதிய உயர்வு 2023-24 ஆம் கல்வி ஆண்டு முதல் நடைமுறைக்கு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share this post with your friends