ஜம்மு காஷ்மீரில் புல்வாமாவில் ராணுவ வீரர்கள் மீதான தாக்குதலுக்கு வழிவகுத்த மத்திய உள்துறை அமைச்சகத்தின் அலட்சியம் குறித்து பேச வேண்டாம் என்று பிரதமர் மோடி தன்னிடம் கூறியதாகவும் ஜம்மு காஷ்மீர் முன்னாள் ஆளுநர் சத்யபால் மாலிக்; தெரிவித்திருந்தார்.இந்நிலையில், இந்த விவகாரம் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய காஷ்மீர் பாஜக செய்தித் தொடர்பாளர் அல்தாப் தாக்கூர்,புல்வாமா தாக்குதலுக்குக் காரணமாக இருந்த பாகிஸ்தான் மீது துல்லியத் தாக்குதல் நடத்தியது மத்திய அரசு. அதேநேரம், ஸ்ரீPநகர் – ஜம்மு தேசிய நெடுஞ்சாலையில் ராணுவ வீரர்கள் பயணிப்பது என்பது புதிதல்ல. நூறாண்டுகளாக அவர்கள் அந்த சாலையில்தான் பயணிக்கிறார்கள்.அதே சமயம், சத்யபால் மாலிக் எப்போதுமே சர்ச்சைக்குரிய கருத்துகளைக் கூறுபவர்.அதிலும், தற்போது அவருக்கு வயதாகிவிட்டதால் நினைவிழந்துவிட்டார். ஏற்கெனவே, மனநல மருத்துவமனைக்குச் சென்றவர் அவர்.எனவே,தற்போதும் அங்கு அவர் சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.
திருவண்ணாமலையில் மண்சரிவு: ரூ.5 லட்சம் நிவாரணம் அறிவிப்பு
திருவண்ணாமலை மண்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் நிவாரண நிதி...
Read More