திண்டுக்கல் மாவட்டம், துமிச்சிபாளையம் பகுதியை சேர்ந்தவர் 34 வயதான முருகேசன். இவர் கள்ளிமந்தயம் பகுதியில் கடந்த 2020 ஆம் ஆண்டு, 14 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை செய்தார். இதனால் இவரை, கள்ளிமந்தயம் காவல் நிலைய காவலர்கள் போக்சோ வழக்கில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.இவ்வழக்கு திண்டுக்கல் விரைவு மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த நிலையில் திண்டுக்கல் விரைவு மகிளா நீதிமன்ற நீதிபதி, குற்றவாளி முருகேசனுக்கு 32 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் 15ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பு வழங்கினார்.
திருவண்ணாமலையில் மண்சரிவு: ரூ.5 லட்சம் நிவாரணம் அறிவிப்பு
திருவண்ணாமலை மண்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் நிவாரண நிதி...
Read More