ஆந்திராவில் விஜயவாடா அருகில் இருக்கும் அமராவதியில் மத்திய அரசின் நிதி ஒதுக்கீட்டுடன் சட்டப்பேரவை, தலைமை செயலகம், அமைச்சர்கள், சட்டப்பேரவை உறுப்பினர்கள், அதிகாரிகள் ஆகியோருக்கான குடியிருப்புகளும் ஏற்படுத்தப்பட்டன.இந்த கூழலில், அங்கு, ஏற்பட்ட ஆட்சி மாற்றத்தைத் தொடர்ந்து, சட்டப்பேரவைத் தலைநகராக அமராவதியும், நிர்வாக தலைநகராக விசாகப்பட்டினமும், நீதித்துறை தலைநகராக கர்நூலும் இருக்கும் என்று ஜெகன்மோகன் ரெட்டி அறிவித்தார். இந்நிலையில் ஸ்ரீPகாகுளத்தில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சி ஒன்றில் பேசிய முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி, ‘செப்டம்பர் மாதம் முதல் ஆந்திராவின் நிர்வாக தலைநகராக விசாகப்பட்டினம் செயல்பட துவங்கும். நான் அங்கு குடியேற இருக்கிறேன்’ என்று அறிவித்துள்ளார்.
திருவண்ணாமலையில் மண்சரிவு: ரூ.5 லட்சம் நிவாரணம் அறிவிப்பு
திருவண்ணாமலை மண்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் நிவாரண நிதி...
Read More