Mnadu News

செய்யாற்றில் குறுக்கணை திறப்பு : மக்கள் மகிழ்ச்சி

காஞ்சிபுரம் அடுத்த வெங்கசேரி அருகே செய்யாற்றில் குறுக்கே 8 கோடி மதிப்பில் தடுப்பணையைக் காஞ்சிபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் மரகதம் குமரவேல் திறந்து வைத்தார். இதனால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர்.

காஞ்சிபுரம் மாவட்டம், உத்திரமேரூர் வட்டம், வெங்கச்சேரி கிராமம் அருகில் செய்யாற்றின் குறுக்கே வெங்கச்சேரியில் ரூ.80000 இலட்சம் மதிப்பீட்டில் நிலத்தடி நீரினை செறிவூட்டவும் அருகில் உள்ள கிராமங்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யவும் இத்தடுப்பணை கட்ட அனுமதி அளிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து தடுப்பணை பணியானது 07.12.2017-ல் தொடங்கப்பட்டு தற்பொழுது பணிகள் அனைத்தும் முடிக்கப்பட்டுள்ளது.

இத்தடுப்பணையானது செய்யாற்றில் அமைந்துள்ள உத்திரமேரூர் அணைக்கட்டின் கீழ் 5 கி.மீ தொலைவிலும், காஞ்சிபுரம் உத்திரமேரூர் மாநில நெடுஞ்சாலையில் மாகரல் – வெங்கச்சேரி தரை பாலத்தின் மேற்புறமாக இந்த அணைக்கட்டு அமைந்துள்ளது.

இந்த அணைக்கட்டு 1.70 மீ உயரத்தில் 268.20 மீ நீளத்திலும் அணைக்கட்டின் இடது மணற்போக்கிகளும், 2 கண்வாய்கள் உடைய புறம் 2 கண்வாய்களை உள்ளது. பாசன தலைப்பு மதகுகளும், அணைக்கட்டில் தேக்கப்படும் வெள்ள நீர் தலைப்பு மதகின் வழியாக வாந்தண்டலம் ஏரிக்கு காவாந்தண்டலம் ஏரி நீர் வழங்கும் கால்வாய் மூலம்பாசனத்திற்கு நீர் வழங்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.

இந்த அணைக்கட்டின் மூலம் 327.765 ஹெக்டேர் நிலங்களுக்கு பாசன உறுதி செய்யப்படுவதுடன், நிலத்தடி நீர் செறிவூட்டலும் மேற்கொள்ளப்படும். மேலும், இந்த அணைக்கட்டில் தண்ணீர் தேக்குவதன் மூலம் அருகில் உள்ள 17 கிராம மக்களுக்கு குடிநீர் தங்குதடையின்றி கிடைக்குமாறு கட்டப்பட்டுள்ள. விவசாயிகளின் நீண்ட கோரிக்கையான இந்த தடுப்பணையால் விவசாயிகள் மகிழ்ச்சி உடன் நன்றி தெரிவித்தனர்.

Share this post with your friends

“10 நாட்களில் உதயநிதி ஸ்டாலின் துணை முதலமைச்சராக பதவியேற்கிறார்”

திமுகவில் தற்போது இளைஞரணிச் செயலாளராகவும் விளையாட்டுத்துறை அமைச்சராகவும் செயல்பட்டு வரும் உதயநிதி ஸ்டாலின்,துணை...

Read More