மத்திய அரசின் கீழ் செயல்பட்டு வரும் உருக்காலை சில ஆண்டுகளாக நஷ்டத்தில் இயங்குவதால் அதனை தனியாருக்கு ஏலம் விடப்படும் என்ற அறிவிப்பு சமீபத்தில் வெளியாகியது. மத்திய அரசின் இந்த முடிவுக்கு உருக்காலையில் வேலைப்பார்க்கும் மூவாயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், இன்று குடும்பத்துடன் ஒன்று திரண்ட தொழிலாளர்கள் உருக்காலையின் மூன்று வாயில்களிலும் பேரணியாக சென்று மத்திய அரசிற்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.இந்த கண்டன பேரணியில் திமுக சட்டமன்ற உறுப்பினர் ராஜேந்திரன், சேலம் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ் ஆர். பார்த்திபன் ஆகியோர் கலந்து கொண்டு, தொழிற்சங்கங்களின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தனர்.
திருவண்ணாமலையில் மண்சரிவு: ரூ.5 லட்சம் நிவாரணம் அறிவிப்பு
திருவண்ணாமலை மண்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் நிவாரண நிதி...
Read More