சோமாலியாவில் தலைநகர் மொகதிசுவில் உள்ள கடற்கரை உணவகத்தை வெளிநாட்டுப் பயணிகள், அரசியல் தலைவர்கள் தங்குவதற்கு பயன்படுத்தி வந்தனர். இந்த சூழலில்,இந்த உணவகத்தின் மீது, பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இரவு தொடங்கிய இந்த தாக்குதல் அதிகாலை வரை நீடித்தது. சம்பவ இடத்தில் திரண்ட ராணுவம் மற்றும் போலீஸார், அந்த உணவகத்தில் சிக்கியிருந்த முதியவர்கள், பெண்கள், குழந்தைகள் என 84 பேரை பத்திரமாக மீட்டனர்.இருப்பினும் இந்த தாக்குதலில் மூன்று வீரர்கள் உள்பட 9 பேர் கொல்லப்பட்டனர். அல்-கெய்தாவின் கிழக்கு ஆப்பிரிக்காவின் இணை நிறுவனமாக அல்-ஷபாப் இந்த தாக்குதலுக்கு பொற்றுபேற்றுள்ளது. சம்பவ இடத்தில் ராணுவம் மற்றும் போலீஸார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திருவண்ணாமலையில் மண்சரிவு: ரூ.5 லட்சம் நிவாரணம் அறிவிப்பு
திருவண்ணாமலை மண்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் நிவாரண நிதி...
Read More