பிரம்மாண்ட இயக்குனர் ராஜமௌலி இயக்கத்தில் ஜூனியர் என் டி ஆர், ராம் சரண், அஜய் தேவ்கன், ஆலியா பட், சமுத்திரகனி ஆகியோர் நடிப்பில், மரகதமணி இசையில் வெளியாகி உலகமெங்கும் பிளாக் பஸ்டர் ஹிட் அடித்த படம் “ரத்தம் ரணம் ரௌத்திரம்”.
தமிழ் தெலுங்கு மலையாளம் கன்னடம் ஹிந்தி என வெளியான அனைத்து மொழிகளிலும் வசூல் சாதனை மற்றும் நல்ல வரவேற்பை பெற்றது. இப்படம் ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
இப்படம் சென்ற வாரம் ஜப்பான் மொழியில் டப் செய்யப்பட்டு வெளியான நிலையில் தற்போது வரை ₹22 கோடிகளை வசூல் செய்துள்ளது என தகவல் வெளியாகி உள்ளது. இதுவே முதல் முறையாக ஒரு தமிழ் படம் இப்படி ஒரு வசூல் சாதனையை ஜப்பானில் நிகழ்த்துவது என்பதாகும். அதே போல இன்னும் சில நாட்கள் அங்கு ஓடினால் ₹100 கோடிகளை தொட்டு விடும் எனவும் சொல்லப்படுகிறது.