1998 ஆம் ஆண்டு பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் பிரஷாந்த், ஐஸ்வர்யா ராய், நாசர், ராஜூ சுந்தரம், செந்தில், லட்சுமி போன்ற பலர் நடிப்பில் வெளியாகி பிளாக் பஸ்டர் ஹிட் அடித்த திரைப்படம் “ஜீன்ஸ்” ஏ ஆர் ரஹ்மான் இசையில், வைரமுத்து வரிகளில் வெளிவந்த பாடல்கள் இன்றும் பலரின் இதயங்களில் ரீங்காரம் இட்டு வருகிறது.
ஆனால், பிரஷாந்த் ஒப்பந்தம் ஆகுவதற்கு முன் சில முன்னணி நடிகர்கள் நடிப்பதாக இருந்ததாம். அஜித், பிரபுதேவா இருவரிடமும் ஷங்கர் கதை கூறி இருந்தாராம். ஆனால், சில காரணங்களால் அவர்கள் இருவராலும் நடிக்க இயலவில்லை.
இவர்கள் இருவருக்கு பிறகும் இப்படத்தின் வாய்ப்பு நடிகர் அப்பாஸிற்கு சென்றுள்ளது. ஜீன்ஸ் கதையை கேட்டுவிட்டு அப்பாஸும் ஓகே சொல்ல தனது மேனேஜரை பேச சொல்கிறேன் என கூறிவிட்டு வெளியூருக்கு சென்றுள்ளார்.இதன்பின் என்ன நடந்தது என்று தெரியவில்லை, அப்பாஸ் திடீரென படத்திலிருந்து நீக்கப்பட்டு உள்ளார். இதை ஒரே நேர்காணலில் அவர் கூறி வருத்தத்தை பதிவு செய்துள்ளார்.
அதன் பின்பு தான் இந்த வாய்ப்பு பிரஷாந்த் அவர்களுக்கு வந்து அந்த படம் அவரின் திரை வாழ்வில் திருப்புமுனை தந்த படமாக அமைந்தது. மேலும், ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட படம் என்பதும் குறிப்பிடத்தக்கது.