Mnadu News

ஜெகன் மோகன் ரெட்டி சகோதரியை காருடன் தூக்கி சென்ற போலீசார் .

தெலுங்கானாவில் முதல்- அமைச்சர் சந்திரசேகர் ராவ் தலைமையில் தெலுங்கானா ராஷ்டீரிய சமிதி கட்சி ஆட்சி செய்து வருகிறது. இந்த சூழலில், ஒய்.எஸ்.ஆர். தெலுங்கானா என்ற பெயரிலான கட்சியை, ஆந்திர பிரதேச முதல்- அமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டியின் சகோதரியான சர்மிளா ரெட்டி தனியாக தொடங்கி நடத்தி வருகிறார். இந்த நிலையில், தெலுங்கானா முதல்-அமைச்சர் சந்திரசேகர் ராவுக்கு எதிராக அவரது இல்லத்திற்கு முன் போராட்டம் நடத்துவதற்காக சர்மிளா ரெட்டி காரில் புறப்பட்டு சென்றார். இதுபற்றி போலீசாருக்கு தகவல் சென்றது. இதனை தொடர்ந்து, போலீசார் கிரேன் ஒன்றை கொண்டு வந்தனர். இதன்பின், காரில் சர்மிளா அமர்ந்து இருந்தபோதே, கிரேன் கொண்டு போலீசார் காரை தூக்கி சென்றனர். அவரது ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்களும் காரின் பின்னால் ஓடினர். இதனால், அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Share this post with your friends