Mnadu News

டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 5 பைசா உயர்ந்து ரூ82.46 ஆக உள்ளது.

கச்சா எண்ணெய் விலை சரிவு மற்றும் உள்நாட்டுச் சந்தைகளில் வெளிநாட்டு நிதியின் வருகை அதிகரிப்பு போன்றவை ரூபாயின் மதிப்பு உயர்வதற்கு காரணமாக இருந்தது என்று அந்நியச் செலாவணி வர்த்தகர்கள் தெரிவித்தனர். அந்நியச் செலவணி சந்தையில் உள்நாட்டு அலகு டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 5 பைசா உயர விற்பனையானது.ஆர்பிஐ-ன் இந்த அறிவிப்புச் சந்தைகளின் ஒட்டுமொத்த உணர்வுகளைத் தூண்டியது என்று நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.இதனிடையே, அடுத்தவாரம் அறிவிக்கப்பட உள்ள அமெரிக்க மத்திய வங்கியின் வட்டி விகிதம் குறித்து முதலீட்டாளர்கள் எச்சரிக்கையுடன் இருக்கின்றனர்.

Share this post with your friends