2015 ஆம் ஆண்டு அஜய் ஞானமுத்து இயக்கத்தில் அருள்நிதி உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான திரைப்படம் “டிமான்டி காலனி”. குறுகிய பட்ஜெட்டில் உருவான இந்த திரைப்படம் வசூலில் வேட்டை நடத்தியது. தற்போது 7 ஆண்டுகளுக்கு பிறகு “டிமான்டி காலனியின்” செகண்ட் பார்ட் தயாராகி உள்ளது.
அருள்நிதி ஜோடியாக ப்ரியா பவானி சங்கர் நடிக்க, சாம்.சிஎஸ் இசையமைத்துள்ளார். விக்ரம் நடித்த ‘கோப்ரா’ திரைப்படத்தை அடுத்து, அஜய்ஞானமுத்து டிமான்டி காலனி பார்ட் 2 படத்தை இயக்கி உள்ளார்.
த்ரில்லர் வகை படங்கள் தான் அருள் நிதியின் பிரதான தேர்வாக பார்க்கப்படும் நிலையில், மீண்டும் அந்த வரிசையிலான ஹாரர் கலந்த திரைப்படம் ஒன்றில் நடிக்கிறார். அதிலும், தான் நடித்த திரைப்படத்தின் செகண்ட் பார்டில் தோன்றுவதன் மூலம் திரைப்பயணத்தில் அடுத்த பாய்ச்சலை நிகழ்த்தி இருக்கிறார்.
கடந்த வாரம் டிமான்டி காலனி பார்ட் 2 படப்பிடிப்பு நிறைவடைந்ததை அடுத்து, அதன் மேக்கிங் வீடியோ ஒன்றினை படக்குழு நேற்று மாலை வெளியிட்டது. “இருள் ஆளப்போகிறது” என்ற கேப்ஷனுடன் வெளியான மேக்கிங் வீடியோ, டிமான்டி காலனி -2 அதன் முதல் பாகத்தை விட பட்ஜெட் கூடுதலாகவும், இன்னும் ஹரார் கலந்து கொடுத்துள்ளது படக்குழு. செப்டம்பர் மாதம் வெளியாகும் என அஜய் ஞான முத்து டுவீட் செய்துள்ளார்.